×

நலிந்த தயாரிப்பாளர் படத்தில் இலவசமாக நடிப்பேன்: ஆரி

சென்னை: தமிழ் மற்றும் மலையாளத்தில் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரித்துள்ள படம், சிட்தி. பயஸ் ராஜ் இயக்கியுள்ளார். அஜி ஜான், அக்‌ஷயா உதயகுமார், ஹரிதா நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற நடிகர் ஆரி பேசியதாவது:

சிறுபட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை என்று சொன்னார்கள். எல்லோருமே அப்படியில்லை. நலிந்த தயாரிப்பாளருக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ முடியும்.  ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள். அவர் தயாரிக்கும் படத்தில், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன். இதே உதவியை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் செய்ய தயாராக இருக்கிறேன். புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஒரு படம் உருவாக்கினால், அதிலும் நான் இலவசமாக நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Ari , Producer, Ari, actor
× RELATED மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை